செய்தி செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு தொல்லைக்கு இல்லை எல்லை!

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கோவை புறநகர் பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துவருவதால் முத்தரப்பு உள்ளிட்ட நவடிக்கைகளை தீவிரப்படுத்தி அரசு இதற்கு முடிவுகட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.கோவை புறநகர், வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களை ஒட்டி வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை

பெ.நா.பாளையம்: கோவை புறநகர் பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துவருவதால் முத்தரப்பு உள்ளிட்ட நவடிக்கைகளை தீவிரப்படுத்தி அரசு இதற்கு முடிவுகட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.கோவை புறநகர், வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களை ஒட்டி வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை விலங்குகள் துவம்சம் செய்தவதால், விவசாயிகள் பலர் வேளாண் தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக நகர்புறங்களில் குடியேறும் அவலம் நீடித்து வருகிறது.வனவிலங்குகள், குறிப்பாக, யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, 'பேட்டரி' மின் வேலி, அகழி, ராட்சத 'டார்ச்லைட்' அடித்தல் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, வனத்துறையினர் மேற்கொண்டாலும் நிலையான பலன் கிடைப்பதில்லை.இதனால், ஆனைகட்டியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரையுள்ள மலையோர கிராமங்களில், தினசரி ஏதாவது ஒரு பகுதியில் யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது.காட்டு யானைகளின் வரவை தடுக்க, மலையிலிருந்து கிராமங்களை நோக்கி வரும் பாதையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், யானைகளை இவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை. வனவிலங்கு, மனித மோதலால் அடிக்கடி உயிரிழப்பும் ஏற்படுகிறது.சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம் பெரியநாயக்கன்பாளையம் விவசாயிகள் கூறியதாவது:தென்னை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சுவைத்து பழகிவிட்டன. இதனால், வனப்பகுதியில் தேவையான உணவு இருந்தாலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. பயிர்களை சேதப்படுத்துவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீர் தொட்டிகளை அமைத்து, வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கவும், அவை விரும்பும் பயிர்களை வனப்பகுதியில் விளைவித்து வராமல் தடுக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைக்கப்பட்டு, இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். காட்டு யானைகளைவிட, மயில், காட்டுப்பன்றிகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவற்றை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நடவடிக்கை எடுக்கிறோம்!வனத்துறையினர் கூறுகையில்,'வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறுவது அதிகரித்தாலும், அவற்றால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தவும், விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X