துளிகள் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்காக அகற்றப்பட்ட 'டிவைடர்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
அன்னுார்: அமைச்சருக்காக அகற்றப்பட்ட டிவைடர்கள் மீண்டும் பள்ளி முன் வைக்கப்படாததால் மாணவர்களின் பெற்றோர் விபத்து பயத்தில் உள்ளனர்.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மெயின் ரோட்டில் பள்ளி இருப்பதால் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.மூன்று மாதங்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அன்னுார் வழியாக

அன்னுார்: அமைச்சருக்காக அகற்றப்பட்ட டிவைடர்கள் மீண்டும் பள்ளி முன் வைக்கப்படாததால் மாணவர்களின் பெற்றோர் விபத்து பயத்தில் உள்ளனர்.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மெயின் ரோட்டில் பள்ளி இருப்பதால் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.மூன்று மாதங்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அன்னுார் வழியாக சென்றபோது அந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன; அதன்பிறகு மீண்டும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், விபத்துக்களை தவிர்க்க, பள்ளி முன், 100 மீட்டர் நீளத்துக்கு டிவைடர்கள் வைக்கப்பட்டன. கடந்த, 13ம் தேதி மக்கள் சபை நிகழ்ச்சிக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பள்ளிக்கு வந்ததால், டிவைடர்கள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சி முடிந்து, 10 நாட்கள் ஆகியும் மீண்டும் டிவைடர்கள் அங்கு வைக்கப்படவில்லை. வேகத்தடையும், டிவைடரும் இல்லாததால், இந்த பகுதியில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன.குழந்தைகள் இந்த சாலையை கடக்கும் போது விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன், மீண்டும் டிவைடர்கள் வைப்பதுடன், வேகத்தடையும் அமைக்க வேண்டும். மக்கள் சபை நிகழ்ச்சி வாயிலாக நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறும் அமைச்சர், இப்பள்ளி மாணவர்களே டிவைடர், வேகத்தடை தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்கு முன், காலம் தாழ்த்தாது நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X