துளிகள் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் 66 பேர் போட்டியிட விருப்பம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், 42 பேரும், அன்னுாரில், 24 பேரும் விருப்ப மனுக்கள் அளித்தனர்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகள் செய்து வருகின்றன. தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடந்தது. சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் போட்டியிட, 42 பேர் விருப்ப மனு

கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், 42 பேரும், அன்னுாரில், 24 பேரும் விருப்ப மனுக்கள் அளித்தனர்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகள் செய்து வருகின்றன. தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடந்தது. சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் போட்டியிட, 42 பேர் விருப்ப மனு அளித்தனர். இங்கு, 15 வார்டுகளில், 12 ஆயிரத்து, 206 வாக்காளர்கள் உள்ளனர். இதில், எட்டு வார்டுகள் பெண்களுக்கும், ஏழு வார்டுகள் பொது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அன்னுார் பேரூராட்சியில், 18 ஆயிரத்து, 870 வாக்காளர்கள், 15 வார்டுகளில் உள்ளனர். இதில், 24 பேரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக, எட்டாவது வார்டில், நான்கு பேர் விருப்ப மனு அளித்தனர். சில வார்டுகளில், தலா ஒருவர் மட்டுமே அளித்திருந்தனர். நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X