தமிழ்நாடு

1,392 பேர் பயிலும் அரசுக்கல்லூரியில்.. பாடம் நடத்த ஆளில்லை!

Added : நவ 24, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது கேள்விக்குறியாவதுடன், இதர ஆசிரியர்களுக்கு பணிச்சுமையும் கூடியுள்ளது.மேட்டுப்பாளையம், குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே அரசு கலை, அறிவியல் கல்லுாரி உள்ளது. கடந்த, 2016ம் ஆண்டு துவக்கத்தில், நான்கு பட்டப்படிப்புகள் மட்டுமே


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது கேள்விக்குறியாவதுடன், இதர ஆசிரியர்களுக்கு பணிச்சுமையும் கூடியுள்ளது.மேட்டுப்பாளையம், குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே அரசு கலை, அறிவியல் கல்லுாரி உள்ளது. கடந்த, 2016ம் ஆண்டு துவக்கத்தில், நான்கு பட்டப்படிப்புகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன. தற்போது, ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), கணிதம் என, 9 இளங்கலை படிப்புகளும், எம்.காம்.,முதுகலை படிப்பும் என, 10 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.இளங்கலை படிப்புகளில், 1,358 பேர், முதுகலை படிப்பில், 34 பேர் என, 1,392 மாணவர்கள் பயிலும் நிலையில், அனைத்து துறைகளுக்கும் சேர்ந்து ஏழு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல், சுற்றுலா மேலாண்மை ஆகிய நான்கு துறைகளுக்கு, துறை சார்ந்த ஆசிரியர்கள் ஒருவர்கூட இல்லை என்ற அதிருப்தி உள்ளது. இங்கு, 37 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், இதர ஆசிரியர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது. ஆசிரியர் அல்லாத துறைகளில் தரமான கல்வி என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக மாணவர்கள் புலம்புகின்றனர்.மாணவர்கள், பெற்றோர் கூறியதாவது:இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும், ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு துறைக்கு ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தரமான கல்வி பெறமுடியாத நிலை உள்ளது. சமீபத்தில், துவங்கப்பட்ட அறிவியல் ஆய்வுக் கூடத்தில், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களும் தேவை.இயற்பியல், வேதியியல் துறைகளுக்கு போதிய ஆசிரியர்களும் இல்லை.தற்போதைய சூழலில், ஒரு துறைக்கு, இரு ஆசிரியர்களையாவது அரசு நியமிக்க வேண்டும்; ஆனால், யாரும் நியமிக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது. மேலும், விளையாட்டு துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைத்து காலிப்பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும். தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் கொடுத்து பயில முடியாது, அரசு கல்லுாரிகளையே ஏழைகள் நம்பியுள்ளனர். எனவே, மாணவர்களின் ஆரோக்கியமான கல்விக்கு அரசு வித்திட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X