சில வரி செய்திகள்...: இந்தியா| Dinamalar

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : நவ 24, 2021
Share
கடற்படை கமாண்டர் மீது குற்றப்பத்திரிகை புதுடில்லி: நாட்டின் கடற்படைக்கான ஆயுத கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ரகசிய தகவல் கசிந்ததாக சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங், எஸ்.ஜே.சிங் மற்றும் பணியில் இருந்த கமாண்டர் அஜித் பாண்டே உள்ளிட்டோர் கைதாகினர். இந்த வழக்கில் கைதான மற்றொரு கடற்படை கமாண்டர் ஜெகதீஷ் சிங்கிற்கு
 சில வரி செய்திகள்...: இந்தியா

கடற்படை கமாண்டர் மீது குற்றப்பத்திரிகை
புதுடில்லி: நாட்டின் கடற்படைக்கான ஆயுத கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ரகசிய தகவல் கசிந்ததாக சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங், எஸ்.ஜே.சிங் மற்றும் பணியில் இருந்த கமாண்டர் அஜித் பாண்டே உள்ளிட்டோர் கைதாகினர். இந்த வழக்கில் கைதான மற்றொரு கடற்படை கமாண்டர் ஜெகதீஷ் சிங்கிற்கு எதிராக டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.
ஓவைசி காருக்கு அபராதம்
மும்பை: மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் விருந்தினர் மாளிகைக்கு, ஐதராபாத் லோக்சபா எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி நேற்று தன் சொகுசு காரில் வந்தார். அவர் ஓய்வெடுக்க சென்ற பின், அந்த காரின் முன்பக்கம் பதிவு எண் இல்லாததை போலீசார் கவனித்தனர். இதற்கான அபராதமாக 200 ரூபாயை டிரைவரிடம் வசூலித்தனர்.
நீதிமன்றம் வந்த பா.ஜ., -- எம்.பி., \
மும்பை: மஹாராஷ்டிராவின் மாலேகான் நகரில் மசூதி அருகே 2008ல் பைக் குண்டு வெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த போபால் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேர் மீது என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரக்யா சிங் நேரில் ஆஜரானார்.
நீதிமன்றம் சம்மன் அனுப்பவில்லை எனினும், மும்பையில் சிகிச்சையில் இருப்பதால் அவர் ஆஜரானதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
சமீர் வான்கடே தந்தை 'அப்பீல்'
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குர் சமீர் வான்கடே முஸ்லிமாக பிறந்து அரசுப்பணிக்காக ஆதிதிராவிடர் என பொய் சான்றிதழ் பெற்றவர் என தேசியவாத காங்., அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியதுடன், சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டார்.
இதுதொடர்பாக சமீர் வான்கடேயின் தந்தை தியான் தேவ் வாங்கடே தாக்கல் செய்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமீர் வான் கடே மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கருத்து தெரிவிக்கவும், சமூக வலை தளங்களில் பதிவிடவும் நவாப் மாலிக்கிற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக தியான் தேவ், மும்பை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்த 'அப்பீல்' மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
மது கடத்தல்; 2 பேர் கைது
ராய்பூர்: சத்தீஸ்கரின் ராய்பூரில், கடத்தல் வழக்கு ஒன்றில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்ஸ்டபிள் கணேஷ் ஜெயின், 35, மற்றும் ஷேக் முயின், 32, ஆகியோர் மது கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் சோதனை நடத்திய போலீசார், அவர்களிடம் இருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைதாயினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X