செய்தி செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் மரச்சாகுபடி 'வனத்துக்குள் திருப்பூரில்' நடவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், விவசாய நிலத்தில், 1,179 மரக்கன்றுகள் நடப்பட்டது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையிலும், ''துாய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம்; விவசாயிகளுக்கு மரம் சொந்தம்'' என்ற அடிப்படையில், விவசாய நிலங்கள், குறைந்த நீர் உள்ள மானாவாரி நிலங்களில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.உடுமலை

உடுமலை: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், விவசாய நிலத்தில், 1,179 மரக்கன்றுகள் நடப்பட்டது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையிலும், ''துாய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம்; விவசாயிகளுக்கு மரம் சொந்தம்'' என்ற அடிப்படையில், விவசாய நிலங்கள், குறைந்த நீர் உள்ள மானாவாரி நிலங்களில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று, கொழுமம், சங்கராமநல்லுார் தெற்கு, ஆத்துார் விவசாயி பிரபு நிலத்தில், தேக்கு, மா, வேம்பு, புங்கன், கருமருது, எலுமிச்சை, செம்மரம் என, 1,179 மரக்கன்றுகள் நடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X