அரசு பள்ளி வளாகத்தில் சிறுத்தை: அச்சத்தில் மாணவர்கள் ஓட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில், அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை புகுந்ததால், மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 929 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மாலை, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது, புதரில் மறைந்த சிறுத்தை, பள்ளி வளாகத்தில் மேய்ந்து கொண்டிருந்த
 அரசு பள்ளி வளாகத்தில் சிறுத்தை: அச்சத்தில் மாணவர்கள் ஓட்டம்



வால்பாறை: வால்பாறையில், அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை புகுந்ததால், மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 929 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மாலை, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது, புதரில் மறைந்த சிறுத்தை, பள்ளி வளாகத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை கவ்வியது.
இதை நேரில் கண்ட மாணவர்கள் கூச்சலிட்டபடி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மாணவர்களின் அலறல் சப்தம் கேட்டு சிறுத்தை, ஆட்டை விட்டு மீண்டும் புதருக்குள் புகுந்தது.பள்ளி வளாகத்தில் ஆடுகள் மேய்வதால், சிறுத்தை அவற்றை இரையாக்கிக்கொள்ள பள்ளி வளாகத்துக்குள் வந்துள்ளது.தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், ''பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பகல் நேரத்தில், பள்ளி வளாகத்தில் வனவிலங்குகள் நடமாடுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளியை சுற்றியுள்ள புதர்களை நகராட்சி சார்பில் சுத்தப்படுத்த வேண்டும்.இரவு நேரத்தில், பள்ளி வளாகத்தில் நிரந்தரமாக சிறுத்தை பதுங்குகிறது. வனத்துறையினர் கண்காணித்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X