செய்தி செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் மாணவர் தேர்தல் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளியில், மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.தேர்தலில், 'தொலைநோக்கு இளைஞர் கட்சி' (வி.ஓய்.பி.,) சார்பாக, இலக்கியா, 'அடுத்த தலைமுறை கட்சி' (என்.ஜி.பி.,) சார்பாக, சந்தோஷி மனஸ்வினியும் போட்டியிட்டனர்.பள்ளி அறங்காவலர்கள் சின்னசாமி, மனோரமா, பள்ளி தலைவர் மணி, பள்ளி தாளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளியில், மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.தேர்தலில், 'தொலைநோக்கு இளைஞர் கட்சி' (வி.ஓய்.பி.,) சார்பாக, இலக்கியா, 'அடுத்த தலைமுறை கட்சி' (என்.ஜி.பி.,) சார்பாக, சந்தோஷி மனஸ்வினியும் போட்டியிட்டனர்.பள்ளி அறங்காவலர்கள் சின்னசாமி, மனோரமா, பள்ளி தலைவர் மணி, பள்ளி தாளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, முன்னாள் மாணவர் தலைவர் பங்கேற்றனர்.நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டினர்.பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஒவ்வொரு வகுப்பும், இரண்டு ஊராட்சி வார்டுகள், இரண்டு ஊராட்சி தலைவர்கள் என, இரு அணிக்கும் போட்டியிட்டனர். எம்.பி., எம்.எல்.ஏ.,வுக்கும் போட்டியிட்டனர்.வெற்றி பெற்ற அணியின் தலைவர், ஊராட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் இணைந்து, நாச்சியார் மாணவர் அரசாங்கம் அமைக்கப்படும். தேர்தலில், 'தொலைநோக்கு இளைஞர் கட்சியினர்' வெற்றி பெற்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X