துளிகள் செய்தி

தமிழ்நாடு

40 மனுக்களுக்கு உத்தரவு: ஒரே நாளில் கிடைத்தது தீர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
அன்னுார்:பட்டா திருத்த முகாமில், ஒரே நாளில், 40 மனுக்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.பச்சாபாளையம் மற்றும் நாரணாபுரம் ஊராட்சி மக்களுக்கான பட்டா திருத்த சிறப்பு முகாம் நேற்று பச்சாபாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் பட்டா திருத்தம் கோரி, 63 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி மூன்று மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி ஒரு மனு உட்பட, 83 மனுக்கள்

அன்னுார்:பட்டா திருத்த முகாமில், ஒரே நாளில், 40 மனுக்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.பச்சாபாளையம் மற்றும் நாரணாபுரம் ஊராட்சி மக்களுக்கான பட்டா திருத்த சிறப்பு முகாம் நேற்று பச்சாபாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் பட்டா திருத்தம் கோரி, 63 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி மூன்று மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி ஒரு மனு உட்பட, 83 மனுக்கள் பெறப்பட்டன.இதில் மூன்று பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு, 37 பேருக்கு பட்டா பெயர் திருத்த உத்தரவு என, 40 மனுக்களுக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது; ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள, 42 மனுக்கள் மீது விசாரணைக்கு பிறகு உரிய உத்தரவு வழங்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அடுத்த முகாம் நாளை கெம்பநாயக்கன்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது. வடவள்ளி மற்றும் காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி மக்கள் இதில் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X