கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு

Added : நவ 24, 2021
Share
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில் கூட்டுறவு சங்க கட்டடம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது.ருத்திரியம்பாளையத்தில், அல்லப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்திற்கு, 1,400 சதுர அடியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி

அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில் கூட்டுறவு சங்க கட்டடம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது.ருத்திரியம்பாளையத்தில், அல்லப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்திற்கு, 1,400 சதுர அடியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து, கூட்டுறவு சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், இயக்குனர்கள் உள்ளிட்டோர், சங்க கட்டடத்தில் குத்து விளக்கேற்றி, வழிபாடு செய்து, சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கணேசபுரத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். 'அன்னுாரின் தெற்குப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கணேசபுரத்திலும், தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் இந்த கட்டட திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது' என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X