பீஹார் சாலையில் 'ஜீப்' ஓட்டி லாலு பிரசாத் யாதவ் அசத்தல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பாட்னா:பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சாலையில் 'ஜீப்' ஓட்டி அசத்திஉள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 73, கடந்த ஏப்ரல் மாதம், ஜாமினில் வெளியே
 பீஹார் சாலையில் 'ஜீப்' ஓட்டி லாலு பிரசாத் யாதவ் அசத்தல்

பாட்னா:பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சாலையில் 'ஜீப்' ஓட்டி அசத்திஉள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 73, கடந்த ஏப்ரல் மாதம், ஜாமினில் வெளியே வந்தார். டில்லியில் தங்கி இருந்த இவர், கடந்த மாதம் பீஹாருக்கு திரும்பினார்.
தலைநகர் பாட்னாவில் உள்ள தன் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் இவர் வசித்து வருகிறார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று ஜீப் ஓட்டி அசத்தி உள்ளார். பங்களாவுக்கு அருகே உள்ள சாலைகளில், திறந்தவெளி ஜீப்பை ஓட்டிச் சென்று, தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.
லாலு பிரசாத் யாதவால் வாங்கப்பட்ட முதல் வாகனம் இதுவாகும்.அப்போது எடுக்கப்பட்ட 'வீடியோ'வை, அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். அதன்கீழ் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:பல ஆண்டுகளுக்குப் பின், என் முதல் வாகனத்தை நான் ஓட்டினேன்.

இந்த உலகத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் ஓட்டுனர் தான். அன்பு, நல்லிணக்கம், சமத்துவம், செழுமை, சகிப்புத்தன்மை மற்றும் நீதி ஆகியவற்றை சுமந்து செல்லும் கார், அனைவரின் வாழ்விலும் சீராக இயங்கட்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X