செய்தி செய்தி

தமிழ்நாடு

புதர் அகற்றி சுத்தமானது மைதானம்: விளையாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
நெகமம்: நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பரவியிருந்த முட்புதர் மற்றும் பெரிய கற்கள் மூடப்பட்டு, சமன்படுத்தப்பட்டது.நெகமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், சுற்றுப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக,

நெகமம்: நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பரவியிருந்த முட்புதர் மற்றும் பெரிய கற்கள் மூடப்பட்டு, சமன்படுத்தப்பட்டது.நெகமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகின்றன.
இப்பள்ளிகளில், சுற்றுப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக, பள்ளி வளாகத்தின் பின்பகுதியில், 1.5 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானமாக அமைந்துள்ளது. விளையாட்டு மைதானம், சமதளமற்ற கற்கள் நிறைந்த கரடு முரடான பகுதியாக இருந்தது. இதனால், மாணவர்கள் விளையாட முடியாமல் வகுப்புகளில் முடங்கினர்.மைதானத்தில் பரவியிருந்த கற்களை அகற்றி, சமப்படுத்த, அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு, முட்புதர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாணவ, மாணவியர் விளையாடுவதற்கு ஏற்ற மைதானமாக மாற்றப்படவில்லை.இந்நிலையில், கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்தில், 50 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.அப்போது, மைதானத்தை பார்வையிட்டவர்கள், பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திக் கொடுக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, 10 ஆயிரம் ரூபாய் செலவில், கடந்த இரு நாட்களாக, முட்புதர்கள் அகற்றப்பட்டு, மண் பரப்பப்பட்டது.பல ஆண்டுகளுக்கு பின், நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், விளையாடுவதற்கு தகுதி பெற்றதால், மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X