செய்தி செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, வெங்கடேசா காலனி ரத்தின விநாயகர் கோவில் வீதியில், ஒரே வீட்டை சேர்ந்த, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பாளையத்தில் ஒருவருக்கும்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கானல்புதுார்,

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, வெங்கடேசா காலனி ரத்தின விநாயகர் கோவில் வீதியில், ஒரே வீட்டை சேர்ந்த, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பாளையத்தில் ஒருவருக்கும்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கானல்புதுார், திப்பம்பட்டியில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில் நேற்று, ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், தாமரைக்குளத்தில் ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதியானது.
ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வால்பாறையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.வருவாய் கோட்டத்தில், நேற்று, மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து, தொற்று பாதித்தவர்களுடன் தங்கியவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X