செய்தி செய்தி

தமிழ்நாடு

மழை வந்தால் குளமாகும் 'டிப்போ'

Added : நவ 24, 2021
Share
Advertisement
அன்னுார்: மழை சமயத்தில் அன்னுார் அரசு போக்குவரத்துக்கழக கிளை வளாகம் குளமாக மாறுவதால் பணியாளர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.அன்னுாரில், கோவை ரோட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசு போக்குவரத்துக் கழக கிளை புதிதாக துவக்கப்பட்டது. இங்கே டவுன் பஸ், வெளியூர் பஸ் என, 60 பஸ்கள் உள்ளன.நடத்துனர், ஓட்டுனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என, 250 பேர் பணிபுரிகின்றனர். நான்கு ஏக்கர்

அன்னுார்: மழை சமயத்தில் அன்னுார் அரசு போக்குவரத்துக்கழக கிளை வளாகம் குளமாக மாறுவதால் பணியாளர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.அன்னுாரில், கோவை ரோட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசு போக்குவரத்துக் கழக கிளை புதிதாக துவக்கப்பட்டது. இங்கே டவுன் பஸ், வெளியூர் பஸ் என, 60 பஸ்கள் உள்ளன.நடத்துனர், ஓட்டுனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என, 250 பேர் பணிபுரிகின்றனர். நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள இக்கிளையில், தரைத்தளம் அமைக்கப்படாமல், வெறும் மண் தரையாக உள்ளது.ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் கிளையில் குளம் போல் தண்ணீர் தேங்கிவிடுகிறது.இதனால் பஸ்களை வெளியே எடுப்பதிலும், உள்ளே கொண்டு செல்வதிலும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், சேறும், சகதியுமாக இருப்பதால், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களில் உள்ளே சென்று வரும்போது அவதிக்குள்ளாகின்றனர்.ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், அரசு போக்குவரத்துக்கழக கிளையில் தரைத் தளம் அமைக்க, நிதி ஒதுக்கும்படி பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.மாவட்ட நிர்வாகம் இதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி, அரசு போக்குவரத்துக்கழக கிளையில், தரைத் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X