நடிகையின் கன்னம் போல சாலை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஜெய்பூர்:'ராஜஸ்தானில் தன் சொந்த தொகுதியில் அமைக்கப்படும் சாலைகள், 'பாலிவுட்' நடிகை கேத்தரினா கைப் கன்னம்போல வழவழப்பாக இருக்க வேண்டும்' என, புதிதாக பொறுப்பேற்று உள்ள அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபை சமீபத்தில் விரிவாக்கப்பட்டது. புதிதாக 11 பேர் கேபினட்
 நடிகையின் கன்னம் போல சாலை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

ஜெய்பூர்:'ராஜஸ்தானில் தன் சொந்த தொகுதியில் அமைக்கப்படும் சாலைகள், 'பாலிவுட்' நடிகை கேத்தரினா கைப் கன்னம்போல வழவழப்பாக இருக்க வேண்டும்' என, புதிதாக பொறுப்பேற்று உள்ள அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபை சமீபத்தில் விரிவாக்கப்பட்டது. புதிதாக 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், நான்கு பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள ராஜேந்திர குட்டா, பதவி ஏற்ற இரு தினங்களிலேயே சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். தன் சொந்த தொகுதியான உதய்புர்வதியில் உள்ள பாவோங் கிராமத்துக்கு சென்ற அமைச்சரை, மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

அவரிடம் சிறப்பான சாலை வசதிகள் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரை பார்த்த அமைச்சர் ராஜேந்திர கட்டா, ''என் தொகுதியில் அமைக்கப்படும் சாலைகள், நடிகை கேத்தரினா கைப் கன்னம் போல வழவழப்பாக இருக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.அமைச்சரின் இந்த பேச்சு, 'டிவி' மற்றும் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X