நெரிசலுக்கு தீர்வுகாண புறவழிச்சாலை... அமைச்சர் சாமிநாதன் நம்பிக்கை| Dinamalar

தமிழ்நாடு

நெரிசலுக்கு தீர்வுகாண புறவழிச்சாலை... அமைச்சர் சாமிநாதன் நம்பிக்கை

Added : நவ 24, 2021
Share
அன்னுார்: ''அன்னுாரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வுகாண புறவழிச்சாலை அமைக்கப்படும்,'' என, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றதையடுத்து, தி.மு.க.,-காங்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று அன்னுாரில் நடந்தது. அப்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

அன்னுார்: ''அன்னுாரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வுகாண புறவழிச்சாலை அமைக்கப்படும்,'' என, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றதையடுத்து, தி.மு.க.,-காங்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று அன்னுாரில் நடந்தது. அப்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், "கோவை மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். அன்னுாரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில்,''கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பது ஒரு பொய்யான பிம்பம். சட்டசபைத் தேர்தலில் தோல்வியை தழுவிய தி.மு.க., ஆறு மாதங்களில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், 13 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம், நாட்டிலேயே முதல் இடம் பெற்றுள்ளது,'' என்றார்.ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசுகையில், "முதலீட்டாளர்கள் மாநாட்டில், 35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது; 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.கோவை புறக்கணிக்கப்படுகிறது என்பது பொய்யான புகார்," என்றார்.தள்ளுமுள்ளு!கூட்டத்தின் முடிவில், 400 கிலோ சிக்கன், 200 கிலோ மட்டன் கொண்டு தயாரிக்கப்பட்ட மட்டன் பிரியாணி, சிக்கன் வருவல், மட்டன் 'கிரேவி' வழங்கப்பட்டது. எனினும், 2,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் உணவு வழங்கும் இடத்தில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொண்டர்கள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு, முண்டியடித்துக் கொண்டு விருந்தில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X