பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுங்க! 'இ -- மெயில்' வாயிலாக அறிவுறுத்தல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:'வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், உடனே தாக்கல் செய்யுங்கள்' என, வரி செலுத்துவோருக்கு, வருமான வரித் துறை சார்பில், 'இ -- மெயில்' அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2020 - -21ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்., வரை வழங்கப்பட்டது.வருமான வரி கணக்கு தாக்கலுக்கு, www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை, மத்திய அரசு ஜூனில் அறிமுகம்
 வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுங்க! 'இ -- மெயில்' வாயிலாக அறிவுறுத்தல்

சென்னை:'வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், உடனே தாக்கல் செய்யுங்கள்' என, வரி செலுத்துவோருக்கு, வருமான வரித் துறை சார்பில், 'இ -- மெயில்' அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த 2020 - -21ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்., வரை வழங்கப்பட்டது.வருமான வரி கணக்கு தாக்கலுக்கு, www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை, மத்திய அரசு ஜூனில் அறிமுகம் செய்தது. அதில், பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இருப்பினும், இதன் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக புகார் எழுந்தது.இதையடுத்து, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை, 'இ - மெயில்' வாயிலாக அனுப்பி வரும் தகவல்:வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இது நல்ல நேரம். இதுவரை, 2.5 கோடி பேருக்கு மேல், கணக்கு தாக்கல் செய்துள்ளனர். நீங்களும் உடனடியாக கணக்கு தாக்கல் செய்யுங்கள்.ஏற்கனவே கணக்கு தாக்கல் செய்திருந்தால், இந்த அறிவுறுத்தலை தவிர்த்திடுங்கள். உதவிக்கு, 1800 103 0025, 1800 419 0025 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X