பொது செய்தி

தமிழ்நாடு

பட்டமளிப்பு சான்றிதழ் ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.கடந்த 2017ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., சட்டத்தில், லாப நோக்கம் இன்றி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களுக்கு, கற்பித்தல் பணிகள் தொடர்பான சேவைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப் பட்டிருந்தது. அதனால், அண்ணா பல்கலையில் ஜி.எஸ்.டி., வரி

சென்னை:பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.
கடந்த 2017ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., சட்டத்தில், லாப நோக்கம் இன்றி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களுக்கு, கற்பித்தல் பணிகள் தொடர்பான சேவைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப் பட்டிருந்தது. அதனால், அண்ணா பல்கலையில் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், கல்லுாரிகளுக்கான பல்வேறு சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க, தமிழக அரசு கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அண்ணா பல்கலையில், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, வரி வசூல் துவக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, நேற்று முன்தினம் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 'பட்டமளிப்பு சான்றிதழ் பெற, மாணவர்கள் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன், துணைவேந்தர் வேல்ராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி, 'பட்டமளிப்பு சான்றிதழுக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம்' என, முடிவு செய்தனர்.
அதன்பின், அண்ணா பல்கலையின் திருத்தப்பட்ட சுற்றறிக்கை, கல்லுாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதில், 'பட்டமளிப்பு சான்றிதழுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 'அதற்கு பதில், பட்டம் பெற்ற மாணவர்கள், சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி மற்றும் நேரத்துடன் கூடிய கடிதம் தேவைப்பட்டால், அதை பெற கட்டணத்துடன், 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X