கோபன்ஹாகன்:ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக மேக்டலினா ஆண்டர்சன், 54, பொறுப்பேற்க, அந்நாட்டு பார்லி., அங்கீகாரம் வழங்கிஉள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்வீடன் நாட்டில், ஆளும் சமூக ஜனநாயக கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்டீபன் லோப்வென், சமீபத்தில் பதவி விலகினார்.
இதையடுத்து சமூக ஜனநாயக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட, மேக்டலினா ஆண்டர்சன், பிரதமர் பதவிக்கு போட்டிஇட்டார். இதற்கான ஓட்டெடுப்பு, ஸ்வீடனில் 'ரிக்ஸ்டக்' என அழைக்கப்படும் பார்லி.,யில் நேற்று நடந்தது. 349 உறுப்பினர்கள் அடங்கிய பார்லியில், மேக்டலினாவுக்கு ஆதரவாக, 117 ஓட்டுகளும், எதிராக, 174 ஓட்டுகளும் பதிவாயின. 57 பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஒருவர் அவைக்கு வரவில்லை. ஸ்வீடன் சட்டப்படி, குறைந்தபட்சம், 175 உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டு போடாதவரை ஒருவர் பிரதமராக பொறுப்பேற்று, ஆட்சி நடத்தலாம். அதன்படி, ஸ்வீடனில் முதன் முறையாக மேக்டலினா ஆண்டர்சன் என்ற பெண் பிரதமர் தலைமையில் சமூக ஜனநாயக கட்சி, இடது மற்றும் மத்திய கட்சிகளின் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE