இந்தியா மீது நடவடிக்கையா?அமெரிக்கா தொடர்ந்து மவுனம்!

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன் :'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால், பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.ஈரான், வட கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா, 'காட்சா' சட்டத்தின்கீழ் பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நாடுகளிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை வாங்கும்
இந்தியா ,அமெரிக்கா தொடர்ந்து மவுனம்!

வாஷிங்டன் :'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால், பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.ஈரான், வட கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா, 'காட்சா' சட்டத்தின்கீழ் பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்த நாடுகளிடம் இருந்து ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீதும், இந்த சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்க முடியும்.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து, எஸ் -- 400 ரக, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வாங்க, 2019ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது.


latest tamil news



மொத்தம் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏவுகணைகளை ரஷ்யா ஒப்படைக்கத் துவங்கியுள்ளது.

இதையடுத்து இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'நட்பு நாடான இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, அந்த நாட்டின் எம்.பி.,க்கள்பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளதாவது:ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதை நம் நட்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் என, ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்.காட்சா சட்டத்தின் கீழ் எந்த விதிவிலக்கும் அளிக்க இயலாது. அதுபோல் குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவும் சாத்தியமும் இல்லை.இருப்பினும் அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியான இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
25-நவ-202110:36:55 IST Report Abuse
pattikkaattaan எங்க தல மோடியை பார்த்து அமெரிக்க அண்ணனுக்கு பயம் வந்துருச்சு .. அதான் கண்டுக்காம இருக்காங்க ..
Rate this:
Cancel
25-நவ-202109:26:41 IST Report Abuse
அப்புசாமி இன்னும் கொஞ்சம் பழைய துப்பாக்கி, ட்ரோன், அப்பாச்சியெல்லாம் விக்கணும். இந்தியா அடுத்த ஆர்டரைக் குடுக்கற வரை அமெரிக்கா மௌனம்தான்.
Rate this:
Cancel
25-நவ-202109:26:38 IST Report Abuse
அப்புசாமி இன்னும் கொஞ்சம் பழைய துப்பாக்கி, ட்ரோன், அப்பாச்சியெல்லாம் விக்கணும். இந்தியா அடுத்த ஆர்டரைக் குடுக்கற வரை அமெரிக்கா மௌனம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X