'போக்சோ' குற்றவாளியின் தண்டனை குறைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
லக்னோ:சிறுமியுடன் வாய் வழியே உறவு வைத்துக் கொள்வது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை வகையில் வராது என கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றவாளியின் தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், 'பாலியல் ரீதியாக

லக்னோ:சிறுமியுடன் வாய் வழியே உறவு வைத்துக் கொள்வது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை வகையில் வராது என கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றவாளியின் தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், 'பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலுடன் உடல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல. இது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வராது' என, உத்தரவிட்டது.
இந்த சர்ச்சைக்குரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. 'மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான். அது போன்ற குற்ற செயல்கள், 'போக்சோ' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், 'போக்சோ' வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வினோத உத்தரவை நேற்று பிறப்பித்தது. 'போக்சோ' சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வாய் வழியே உறவு கொண்டுள்ளார். இது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை வகையில் வராது. எனவே, 'போக்சோ' சட்டப் பிரிவு 5/6 அல்லது 9(எம்) பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டியது இல்லை.இவருக்கு பிரிவு 4ன் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே, 10 ஆண்டு சிறை தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X