பொது செய்தி

தமிழ்நாடு

வணிக வரி அலுவலர்கள் விடுப்பு போராட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:வணிக வரித் துறையில், 100க்கும் மேற்பட்ட அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, 71 சதவீத வணிக வரி அலுவலர்கள், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வணிக வரித் துறையில் பொதுமக்கள் நலன் கருதி, 70 மாநில வரி அலுவலர்கள், 30 துணை மாநில வரி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றத்தை கண்டித்து, வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

சென்னை:வணிக வரித் துறையில், 100க்கும் மேற்பட்ட அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, 71 சதவீத வணிக வரி அலுவலர்கள், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிக வரித் துறையில் பொதுமக்கள் நலன் கருதி, 70 மாநில வரி அலுவலர்கள், 30 துணை மாநில வரி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றத்தை கண்டித்து, வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.'வணிக வரி விதிகளுக்கு எதிராக பணியிட மாறுதல் நடந்துள்ளது.
இதை ரத்து செய்யாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யப்படும். முதல்வர் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என, கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.
வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:அலுவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெறவும், அதிலுள்ள 'பொதுமக்கள் நலன் கருதி' என்ற வார்த்தையை திரும்ப பெறவும் கோரி, தமிழகம் முழுதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்தில் மாநிலம் முழுதும் உள்ள வணிக வரி அலுவலர்களில், 71 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக, வணிக வரித்துறையில் நிர்வாக பணிகள் முற்றிலும் முடங்கின.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X