பொது செய்தி

தமிழ்நாடு

ஆவண எழுத்தருக்கு ஓய்வூதியம்?

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் வாயிலாக, ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது.தமிழகத்தில் சொத்து பத்திரங்களை சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பத்திரங்கள் தயாரிக்க, பொதுமக்கள் ஆவண எழுத்தர்களை நாடும் நிலை உள்ளது.தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுதும் 5,188 ஆவண எழுத்தர்கள் உரிமம் பெற்று செயல்படுகின்றனர். பல

சென்னை:ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் வாயிலாக, ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தில் சொத்து பத்திரங்களை சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பத்திரங்கள் தயாரிக்க, பொதுமக்கள் ஆவண எழுத்தர்களை நாடும் நிலை உள்ளது.தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுதும் 5,188 ஆவண எழுத்தர்கள் உரிமம் பெற்று செயல்படுகின்றனர்.
பல இடங்களில் உரிமம் இல்லாதவர்களும், ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர்.இதை கட்டுப்படுத்த, பத்திரங்களில், அதை தயாரித்த ஆவண எழுத்தரின் புகைப்படம், முகவரி, உரிம எண், தொடர்பு எண் ஆகிய விபரங்களை சேர்க்க பதிவுத்துறை உத்தரவிட்டது. இதனால், உரிமம் இன்றி செயல்படும் போலி ஆவண எழுத்தர்கள் ஒதுக்கப்படும் நிலை உருவானது.
மேலும், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆவண எழுத்தர்களுக்காக அறிவிக்கப்பட்ட நல நிதியம் ஏட்டளவிலேயே உள்ளது. அதை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நிதியம் செயல்பாட்டுக்கு வந்தால், ஆவண எழுத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
பணி காலத்தில் இறக்கும் ஆவண எழுத்தர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி, குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X