தமிழ்நாடு

2.45 லட்சம் பேர் எங்கே இருக்காங்களோ! தடுப்பூசி போட தேடுகிறது சுகாதாரப்பிரிவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவையில், 177 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை, 7:00 மணி முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.கோவை மாநகராட்சி பகுதியில், 94 சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியிருக்கின்றனர். இன்னும், 1.40 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர்.கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி, 84 நாட்களும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி, 28 நாட்களும் கடந்தவர்களாக,


கோவை: கோவையில், 177 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை, 7:00 மணி முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.கோவை மாநகராட்சி பகுதியில், 94 சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியிருக்கின்றனர். இன்னும், 1.40 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர்.கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி, 84 நாட்களும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி, 28 நாட்களும் கடந்தவர்களாக, 2.24 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்காக, 177 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.சுகாதாரப்பிரிவினர் கூறியதாவது:
இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, ஊழியர்கள் மூலமாக, தினமும் தொலைபேசி வாயிலாக பேசி, அழைப்பு விடுக்கிறோம். மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.வார அலுவல் நாட்களில் சிறப்பு முகாம் நடத்தும்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நடத்தும் முகாமில், அதிகமானோர் போட்டுக் கொள்கின்றனர். மற்ற நாட்களில் ஆர்வம் காட்டுவதில்லை.தியேட்டர்கள், ஷாப்பிங் மால் மற்றும் அதிகமாக பொதுமக்கள் கூடுமிடங்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறப்பு முகாம்களில் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X