அடுக்குமாடி குடியிருப்புக்கு அபராதம் டெங்கு கொசு இருந்ததால் நடவடிக்கை| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்புக்கு அபராதம் டெங்கு கொசு இருந்ததால் நடவடிக்கை

Added : நவ 24, 2021
Share
கோவை: கோவை மாநகராட்சி களப்பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடிநீர் தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளிக்கின்றனர்.நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் தேக்கும் சிமென்ட் தொட்டி மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரால் துாய்மை செய்து கொள்ள வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வேண்டுகோள்

கோவை: கோவை மாநகராட்சி களப்பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடிநீர் தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளிக்கின்றனர்.நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் தேக்கும் சிமென்ட் தொட்டி மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரால் துாய்மை செய்து கொள்ள வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. தேவையின்றி தண்ணீர் தேங்கியிருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த, சுகாதாரப்பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தெற்கு மண்டலம், 79வது வார்டில், அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான லார்வா கொசு புழுக்கள் கண்டறியப்பட்டதாலும், டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருந்ததாலும், மாநகராட்சி அதிகாரிகளால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X