சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடி: பெண் போராட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கூடலுார்: நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூடலுார் கிளையில், ஓவேலி பாரதிநகரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர், 5.3 பவுன் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். வங்கி அழைப்பின் பேரில் நேரில் சென்று, அரசு உத்தரவுபடி நகை கடனை தள்ளுபடி செய்யும்படி கேட்டுள்ளார். 'நகையின் எடை ஐந்து பவுனுக்கு மேல் இருப்பதால், கடன் தள்ளுபடி இல்லை,' என, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை

கூடலுார்: நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூடலுார் கிளையில், ஓவேலி பாரதிநகரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர், 5.3 பவுன் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். வங்கி அழைப்பின் பேரில் நேரில் சென்று, அரசு உத்தரவுபடி நகை கடனை தள்ளுபடி செய்யும்படி கேட்டுள்ளார். 'நகையின் எடை ஐந்து பவுனுக்கு மேல் இருப்பதால், கடன் தள்ளுபடி இல்லை,' என, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை அவர் ஏற்க மறுத்து, தனது மகனுடன், கண்களில் கருப்பு துணி கட்டி, வங்கி நுழைவு வாயில் முன் அமர்ந்து, நகை கடன் தள்ளுபடி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டார். எஸ்.எஸ்.ஐ., லட்சுமணன், வி.ஏ.ஓ., மோகன்ராஜ் அவரை சமாதானப்படுத்தி, ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X