வனத்துறை வாகனத்தை தாக்கிய அரிசிராஜா| Dinamalar

தமிழ்நாடு

வனத்துறை வாகனத்தை தாக்கிய 'அரிசிராஜா'

Added : நவ 24, 2021
Share
கூடலுார்: கூடலுார் அருகே, வீடு, கோவிலை சேதப்படுத்திய காட்டுயானை, வனத்துறை வாகனத்தையும் தாக்கியது.கூடலுாரில்,'அரிசி ராஜா'உள்ளிட்ட இரண்டு மக்னா யானைகள் நேற்று முன்தினம், இரவு புளியாம்பாறையில் முகாமிட்டன. நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இரவு,10:00 மணிக்கு சீனகொல்லி பகுதியில் ஜெய்செல்வி என்பவர் வீட்டை யானைகள்

கூடலுார்: கூடலுார் அருகே, வீடு, கோவிலை சேதப்படுத்திய காட்டுயானை, வனத்துறை வாகனத்தையும் தாக்கியது.கூடலுாரில்,'அரிசி ராஜா'உள்ளிட்ட இரண்டு மக்னா யானைகள் நேற்று முன்தினம், இரவு புளியாம்பாறையில் முகாமிட்டன. நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இரவு,10:00 மணிக்கு சீனகொல்லி பகுதியில் ஜெய்செல்வி என்பவர் வீட்டை யானைகள் சேதப்படுத்தின. மக்கள் சப்தம் எழுப்பி அதனை விரட்டினர்.தொடர்ந்து, புளியம்பாறை ஜங்சன் பகுதியில், உர குடோன் சட்டர், ரேஷன் கடை அருகே, சிறிய சிமென்ட் குழாயை உடைத்தன. நள்ளிரவு, 1:30 மணிக்கு, ஆமைகுளம் அரசு கல்லுாரி அருகே, கோவிலின் கதவை சேதப்படுத்தியன.அங்கு வன ஊழியர்கள் வந்த ஜீப்பை, 'அரிசிராஜா' யானை தாக்கியது. ஜீப்பிலிருந்து அலாரத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டிய வனக்காப்பாளர் அனீஸ்; வேட்டை தடுப்பு காவலர் விஜய், ஒட்டுனர் கண்ணன் உயிர் தப்பினர். காலை, 6:30 மணிக்கு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.தொடர்ந்து, அப்பகுதிக்கு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.மக்கள் கூறுகையில்,'அரிசி ராஜா' என்ற யானை, மனிதர்களை தாக்கும் முன், அதனை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X