தமிழ்நாடு

மாணவர் விடுதியில் தரமற்ற உணவு அழுகிய காய்கறியுடன் முற்றுகை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஊட்டி: ஊட்டி அருகே பழங்குடியினர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து, பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, முத்தோரை பாலாடாவில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில், உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.இங்கு, 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி

ஊட்டி: ஊட்டி அருகே பழங்குடியினர் விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து, பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, முத்தோரை பாலாடாவில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில், உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.இங்கு, 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, விடுதி மாணவர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.மேலும், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதால், மாணவர்கள் அவதியடைந்து வந்துள்ளனர்.
பெற்றோர் புகார் அளித்தும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தியடைந்த பெற்றோர், நேற்று அழுகிய காய்கறிகளுடன் பள்ளி மற்றும் விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில்,''ஒரு அறையில், 40 மாணவர்களை படுக்க வைக்கின்றனர். பெண்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அழுகிய காய்கறி, பழைய உணவு வழங்கப்படுகிறது,'' என்றார்.பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுகந்தி பரிமளம் கூறுகையில்,''பெற்றோரின் புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X