தமிழ்நாடு

4,000 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி: பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்த முயற்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்த, விரைவில், 4,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை கையாள, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமையாசிரியர் ஆகியோரை உள்ளடக்கிய, பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து நிதி சார்ந்த செலவினங்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு, ஒப்புதல் பெறுவது



கோவை: பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்த, விரைவில், 4,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை கையாள, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமையாசிரியர் ஆகியோரை உள்ளடக்கிய, பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து நிதி சார்ந்த செலவினங்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு, ஒப்புதல் பெறுவது அவசியம்.அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்களிப்பை அதிகரிக்க செய்வதே, இக்குழுவின் நோக்கம்.
ஆனால், பல பள்ளிகளில், மேலாண்மை குழு செயல்படாமல் இருப்பதால், அதை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான பயிற்சி, சமீபத்தில் நடந்தது. இதில், மாநிலம் முழுக்க, 60 ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இவர்களை கொண்டு விரைவில், 4,000 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநில முதன்மை கருத்தாளர் அருளானந்தம் கூறுகையில்,''மாவட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு மண்டலங்களாக பிரித்து, ஆசிரியர்களுக்கு, பயற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் கீழ், 10 பள்ளிகள் ஒதுக்கப்பட்டு, மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X