கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பெயரில் நூலகம் ரூ.114 கோடி ஒதுக்கி அரசாணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:மதுரையில், கருணாநிதி பெயரில் நுாலகம் கட்ட, 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதி புத்தக வாசிப்பிலும், எழுத்திலும் தீராத ஆர்வம் உடையவர். அவர் 2010ல் முதல்வராக இருந்த போது, அண்ணாதுரையின், 102வது பிறந்த நாளில், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை சென்னையில் திறந்து வைத்தார். இந்த நுாலகம் போட்டி தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்,

சென்னை:மதுரையில், கருணாநிதி பெயரில் நுாலகம் கட்ட, 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி புத்தக வாசிப்பிலும், எழுத்திலும் தீராத ஆர்வம் உடையவர். அவர் 2010ல் முதல்வராக இருந்த போது, அண்ணாதுரையின், 102வது பிறந்த நாளில், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை சென்னையில் திறந்து வைத்தார். இந்த நுாலகம் போட்டி தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
மற்ற மாவட்ட மக்களும் இந்த வாய்ப்பை பெறும் வகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், 'கலைஞர் நினைவு நுாலகம் அமைக்கப்படும்' என, இந்த ஆண்டு ஜூன் 3ல், கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சம் சதுர அடி பரப்பில், கருணாநிதி பெயரில், சர்வதே தரத்தில் நுாலகம் அமைக்கப்பட உள்ளது.இதற்கான விரிவான திட்ட மதிப்பில், நுாலகம் கட்ட 99 கோடி ரூபாய்; புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய். தொழில்நுட்ப கருவிகள் வாங்க, 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் வழங்க, பொது நுாலக இயக்குனரகம் கோரியது. இந்த நிதியை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த செலவுக்கு சட்டசபையில் பின்னர் ஒப்புதல் பெறப்படும் என, பொது நுாலகத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X