பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து காங்., ஊர்வலம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காங்., கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பதை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்வது, உர மானியத்தை வழங்க வேண்டும். மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி வரியை குறைக்க

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காங்., கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பதை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்வது, உர மானியத்தை வழங்க வேண்டும். மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். கல்வி மானியத்திற்கான மதிப்பெண் வரம்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில் ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் பாத யாத்திரை ஊர்வலம் நடந்தது.மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். திருவாடானை எம்.எல்.ஏ., கரு மாணிக்கம், மாநில செயலாளர்கள் பினுலால்சிங், அடையாறு பாஸ்கர், பாரிராஜன் முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார்.மாவட்ட துணைத்தலைவர்கள் முருகானந்தம், நிஜாம் அலிகான், காவனுார் கருப்பையா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் அழகுமணிகண்டன், ஆறுமுகம், பாஸ்கரசேதுபதி, கமருதீன், ஊடக தொடர்பாளர்ஹாஜா நஜ்முதீன், மாவட்ட செயலாளர்கள் அழகர்சாமி, சுந்தரராஜ்.வட்டார தலைவர்கள் சேகர், சேதுபாண்டியன், கந்தசாமி, தட்சிணாமூர்த்தி, மனோகரன், சுப்பிரமணி, செல்லச்சாமி, அன்வர், கார்மேகம், முனீஸ்வரன், நகர் தலைவர்கள் கோபி, வரதராஜா, செல்வக்குமார், விஜய ரூபன், மகளிர் அணி மாவட்ட தலைவி ராமலெட்சுமி, கீழக்கரை நகர் துணை தலைவர் கணேசமூர்த்தி, ராமநாதபுரம் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X