தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கு: பொள்ளாச்சியில் கேரள போலீஸ் விசாரணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, கேரள போலீசார் பொள்ளாச்சியில் விசாரணை மேற்கொண்டனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே, எலப்புள்ளியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித்,27. கடந்த, 15ம் தேதி, மனைவியுடன் பைக்கில் சென்றபோது, சஞ்ஜித்தை தாக்கி மர்ம கும்பல் கொலை செய்தது. போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து
 ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கு: பொள்ளாச்சியில் கேரள போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி: கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, கேரள போலீசார் பொள்ளாச்சியில் விசாரணை மேற்கொண்டனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே, எலப்புள்ளியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித்,27. கடந்த, 15ம் தேதி, மனைவியுடன் பைக்கில் சென்றபோது, சஞ்ஜித்தை தாக்கி மர்ம கும்பல் கொலை செய்தது. போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் பிரிவில் உள்ள இரும்பு குடோனில், கேரள மாநில ஏ.டி.எஸ்.பி., பிஜூ பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், ஷெரிப் மற்றும் கேரள போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். குடோன் உரிமையாளர் முருகானந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.கார் விற்பனைகேரள மாநில போலீசார் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை கொலை செய்த கும்பல், 'மாருதி 800' கார் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அவ்வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்தபோது, ஸ்டிக்கர் கடையில், கார் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டியது தெரியவந்தது. அந்த ஸ்டிக்கர் கடைக்காரரிடம், கார் சென்ற வழித்தடம் குறித்து விசாரிக்கப்பட்டது.இதற்கிடையே, கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்ததில், ஏஜன்ட் வாயிலாக, பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் பிரிவு அருகே உள்ள இரும்பு குடோனில், 15 ஆயிரம் ரூபாய்க்கு காரை விற்றது தெரியவந்தது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.பழைய இரும்பு குடோன் உரிமையாளர் முருகானந்தத்திடம் நடத்திய விசாரணையில், காரின் சேசிஸ் எண் மட்டும் அந்த நபர்கள் வாங்கிச் சென்றது தெரியவந்தது. கார் வாங்க யாரும் வராததால், முருகானந்தம், காரை உடைத்து எடை போட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X