பொது செய்தி

தமிழ்நாடு

விடிய..விடிய தொடர் மழையால் பாதிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. வாரச்சந்தை திடல்,அரண்மனை ரோடு, சாலைத்தெருவில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமானதால் வியாபாரிகள் சிரமப்பட்டனர்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7:30 மணி நிலவரப்படி (மில்லி மீட்டரில்) ராமநாதபுரம் - 32.40, மண்டபம்- 33.40, ராமேஸ்வரம் -54.20, பாம்பன் -31.50,

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. வாரச்சந்தை திடல்,அரண்மனை ரோடு, சாலைத்தெருவில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமானதால் வியாபாரிகள் சிரமப்பட்டனர்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7:30 மணி நிலவரப்படி (மில்லி மீட்டரில்) ராமநாதபுரம் - 32.40, மண்டபம்- 33.40, ராமேஸ்வரம் -54.20, பாம்பன் -31.50, தங்கச்சி மடம்- 40.60, திருவாடானை -35.20, தொண்டி- 4.00, ஆர்.எஸ்.மங்கலம் -26.80,பரமக்குடி- 12.80, முதுகுளத்துார் 33.20, கமுதி- 6.00, வாலிநோக்கம்- 35.20, கடலாடி 45.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக நயினார்கோவில் ரோடு, உத்தரகோசமங்கை, சத்திரக்குடி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ராமநாதபுரம் சந்தை திடலில் சேறும்,சகதியுமாக காணப்பட்டதால் புதன் வாரச்சந்தைக்கு வந்த வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலங்கங்களுக்கு செல்பவர்கள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X