அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:''சென்னை மாநகராட்சி மேயர், மறைமுக தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினர், அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை வழங்கி வருகின்றனர்.அந்த வகையில், தென்சென்னை
 சென்னை மேயர் பதவிக்கு  மறைமுக தேர்தல்: அமைச்சர்

சென்னை:''சென்னை மாநகராட்சி மேயர், மறைமுக தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினர், அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தென்சென்னை மாவட்ட செயலரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான சுப்பிரமணியத்திடம், தென்சென்னை பகுதியில் உள்ள 56 வார்டுகளில் போட்டியிட விரும்புவோர், சைதாப்பேட்டை தி.மு.க., அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கடந்த அ.தி.மு.க., அரசு, 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தியது. தி.மு.க., தலைமையிலான அரசு அமைந்தால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். இதையடுத்து, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, தி.மு.க., வரலாற்று வெற்றியை பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு, முதல்வர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.
தென்சென்னை பகுதியில் உள்ள 56 வார்டுகளுக்கு, 600க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து உள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால், நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, காலதாமதம் செய்வதை தவிர்த்து, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வரையறையின்படி, சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் மறைமுக தேர்தலாக நடத்தப்படும்.
சென்னை ஐ.ஐ.டி.,யில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வின் கொள்கை ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். அதன் வளர்ச்சிக்கு தி.மு.க., உதவியுள்ளது. ஜெய்பீம் நல்ல திரைப்படம்; இந்த படம் குறித்து, இதற்கு மேல் பேச வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல், மறைமுக தேர்தலாக நடத்தப்படும் என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்படும். தலைவர் மற்றும் மேயர் பதவிக்கு வருவோர், கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X