பொது செய்தி

இந்தியா

முகேஷ் அம்பானியை முந்தி பெரும் பணக்காரரானார் அதானி

Updated : நவ 26, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை : 'அதானி' குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ரிலையன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராகியிருக்கிறார்.ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருந்து வந்தார். இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி இருந்தார். அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த 2020ஆண்டு மார்சில் 36 ஆயிரத்து 825 கோடி ரூபாயாக இருந்தது.
முகேஷ் அம்பானி, பணக்காரரானார், அதானி

மும்பை : 'அதானி' குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ரிலையன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராகியிருக்கிறார்.

ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருந்து வந்தார். இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி இருந்தார். அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த 2020ஆண்டு மார்சில் 36 ஆயிரத்து 825 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இருபது மாதங்களில் அக்குழுமத்தின் சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் 1800 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நடப்பு ஆண்டில் அதானியின் சொத்து 4.12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அம்பானியின் சொத்து 1.07 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.62 லட்ச கோடி ரூபாயாகவும் அதானியின் சொத்து மதிப்பு 6.60 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

இதற்கிடையே ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு நேற்று சரிந்தது. அதேநேரத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. இதையடுத்து முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராகியுள்ளார் கவுதம் அதானி.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202121:32:25 IST Report Abuse
அப்புசாமி 130 கோடி பேரையும் அதானி ரேஞ்சுக்கு ஒசத்துற வரைக்கும் சௌக்கிதாரே பிரதமர். அவதார புருஷர். என்ன, ஒரு 200 வருஷம் ஆகலாம்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-நவ-202120:41:39 IST Report Abuse
Tamilan இந்தியாவின் இருபெரும் கொள்ளையர்கள். கார்போரேட்டு கொள்ளையர்கள். அரசியல் சட்ட கொள்ளையர்கள். அந்நியர்களைப் போலவே மோடி அரசும் வளர்த்துவிட்டது .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202117:08:23 IST Report Abuse
sankaseshan அதானி அம்பானி முதல் போட்டு முன்னரெறினார்கள் திருட்டு வாரிசு குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்தார்கள் KD ப்ரொதெர்ஸும் BSNL முறைகேட்டில் அரசு பணத்தை ஆட்டையை போட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X