டூகூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்டன் வழங்குவதில் தாமதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் வழங்காமல், ஏதாவது காரணத்தை கூறி தாமதம் செய்கின்றனர். உரம் போடுதல், களையெடுக்கும் பணி செலவிற்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. ஆகவே தகுதி வாய்ந்த அனைவருக்கும் விரைவில் பயிர்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பருவ மழை பெய்து வருவதால் 2 லட்சம்

ராமநாதபுரம்-ராமநாதபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் வழங்காமல், ஏதாவது காரணத்தை கூறி தாமதம் செய்கின்றனர். உரம் போடுதல், களையெடுக்கும் பணி செலவிற்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. ஆகவே தகுதி வாய்ந்த அனைவருக்கும் விரைவில் பயிர்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பருவ மழை பெய்து வருவதால் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல்சாகுபடி மும்முரமாக நடக்கிறது. இப்பணிகளுக்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பயிர்கடன் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலைமையில் சில கூட்டுறவு கடன்சங்கங்களில் முறையாக பதிலளிக்காமல் உறுப்பினர்களை அலைக்கழித்து தாமதம் செய்கின்றனர். உரம் போடுதல், களையெடுக்கும் பணிக்கான செலவிற்கு கடன்வாங்கி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தகுதியுள்ள நபர்களுக்கு விரைவில் பயிர்கடன் வழங்க வேண்டும்.அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் கூறுகையில், 'இவ்வாண்டு கூடுதலாக பயிர்கடன் வழங்குவதாக கூறியுள்ளனர். தற்போது தட்டுப்பாட்டால் உரம் வழங்க கவனம் செலுத்துகின்றனர். உரம் போடுதல், களையெடுக்கும் பணி செலவிற்கு கடன் வாங்குவதை தவிர்க்க, தகுதியான அனைவருக்கும் விரைவில் பயிர்கடன்வழங்க வேண்டும்,' என்றார்.ராமநாதபுரம் கூட்டுறவுத்துறை துணைபதிவாளர்(பொ) உதயகுமார் கூறுகையில், 'வழக்கமாக ரூ.50 கோடி வரை பயிர்கடன் வழங்குகிறோம். இவ்வாண்டு ரூ.200 கோடி வரை பயிர்கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படுகிறது,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X