பொது செய்தி

தமிழ்நாடு

யூரியா விற்பனையில் விதிமீறல்7 உரக் கடைகளுக்கு தடை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வின் போது, விலைப்பட்டியல், ரசீது இல்லாமல் உரம் விற்பனை செய்த, 7 தனியார் கடைகள் தொடர்ந்து உரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெல்சாகுபடி தொடங்கியுள்ளதால் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு சிலர்

ராமநாதபுரம்--மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வின் போது, விலைப்பட்டியல், ரசீது இல்லாமல் உரம் விற்பனை செய்த, 7 தனியார் கடைகள் தொடர்ந்து உரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெல்சாகுபடி தொடங்கியுள்ளதால் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு சிலர் உரம் விற்கின்றனர். இதன் காரணமாக மாவட்ட வேளாண் இணைஇயக்குனர் டாம் பி.சைலஸ் தலைமையில் சிறப்புக் குழுவினர் உரக்கடைகளில் சோதனை செய்கின்றனர். சில தனியார் கடைகளில் விலைப்பட்டியல் இன்றி, ரசீது தராமல், கூடுதல் விலைக்கு உரம் விற்பது தெரியவந்தது. ராமநாதபுரம் நகரில் 2 பரமக்குடியில் 2 கடைகளும், சிக்கலில் 1 கடையும், முதுகுளத்தூரில் 1 என மொத்தம் 7 கடைகள்உரம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விதிகளை பின்பற்றாத 23 கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மூன்று கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க இணைப்பதிவாளரிடம் கூறப்பட்டுஉள்ளது என வேளாண் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X