பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு வயது நீட்டிப்பு அரசாணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிவகங்கை-தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அரசாணையில் இல்லாததால் 50 ஆயிரம் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு வயதை 58 லிருந்து60 ஆக உயர்த்தி 2021

சிவகங்கை-தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அரசாணையில் இல்லாததால் 50 ஆயிரம் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு வயதை 58 லிருந்து60 ஆக உயர்த்தி 2021 அக்., 10 ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதே துறையின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் வயது வரம்பு நீட்டிப்பு குறித்து அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் மன வேதனைஅடைந்துள்ளனர். ஐ.சி.டி.எஸ்., ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வாசுகி தெரிவித்திருப்பதாவது: சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வுநீட்டிப்பு அரசாணை வந்தவுடன் இது குறித்து அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கும் பணி ஓய்வு வயதை நீட்டித்து அரசாணை வெளியிடக்கோரி 2021 அக்., 10, மற்றும் நவ., 7 ஆகிய தேதிகளில் எங்கள் சங்கத்தின் சார்பில் அரசாணை வெளியிடக்கோரி அரசுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளோம். அங்கன்வாடி மையங்களில் 50 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இது வரை எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு மாதமும் வயது முதிர்வு காரணமாக ஊழியர்கள் பணி நிறைவு பெறும்நிலை உள்ளது. வயது நீட்டிப்பு கிடைக்காதா என தவித்து வருகின்றனர்.அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பணி ஓய்வு வயதை 60 ஆக நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X