எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டத்தில் காரசார விவாதம்: பன்னீர்செல்வம் - பழனிசாமி நேரடி மோதல்

Updated : நவ 25, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நேற்று காரசார விவாதம் நடந்தது. அவ்வப்போது மோதல் ஏற்படும் சூழல் உருவானதுடன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே நேரடி வாக்கு வாதமும் அரங்கேறி உள்ளது.அறிவுரைகள்அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை
மா.செ.,க்கள் கூட்டம்,  காரசார விவாதம்: பன்னீர்செல்வம் - பழனிசாமி நேரடி மோதல்

சென்னை:அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நேற்று காரசார விவாதம் நடந்தது. அவ்வப்போது மோதல் ஏற்படும் சூழல் உருவானதுடன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே நேரடி வாக்கு வாதமும் அரங்கேறி உள்ளது.


அறிவுரைகள்

அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:கூட்டத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பேசும் போது பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வெற்றி வாய்ப்பு உள்ளோரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.அனைவரும், 'சீட்' கேட்கிறீர்கள்; வெற்றி பெறுவதில்லை. இம்முறை வெற்றி பெற்று வந்த பிறகு தான், தலைவர் பதவி குறித்து முடிவு செய்யப்படும்.தற்போதே, தேர்தல் பணிகளை துவக்க வேண்டும்.
தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள், அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து, திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.


வாக்குவாதம்

முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா பேச எழுந்த போது, ஏற்கனவே கட்சி தலைமையை விமர்சித்ததற்கு, பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கோபத்துடன் அவரை நோக்கி சென்றார். அருகில் இருந்தவர்கள், அவரை தடுத்து அமர வைத்தனர்.துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், சி.வி.சண்முகம் குறுக்கிட, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பன்னீர்செல்வமும், பழனிசாமியும், சி.வி.சண்முகத்தை கண்டித்து அமர வைத்தனர்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 'வழிகாட்டி குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்; வழிகாட்டி குழு ஆலோசனைப்படியே, கட்சி தலைமை நடக்க வேண்டும்' என்றார்.


காரசார விவாதம்

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'வழிகாட்டி குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்' என்றார். அப்போது பழனிசாமி குறுக்கிட்டு, 'கட்சி தலைமை பொறுப்பில் இருவர் இருந்தே ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இதில், குழுக்களாக நியமித்தால் எதுவும் நடக்காது. கம்யூனிஸ்ட் கட்சி போல, நம் கட்சி மாறிவிடும்' எனக்கூற, அவருக்கும், பன்னீர் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தன்னை கேட்டு எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை என பன்னீர்செல்வம் குற்றம்சாட்ட, அதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவிக்க, சிறிது நேரம் காரசார விவாதம் நடந்தது.அதன்பின், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டிசம்பருக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள்


'வெற்றிக்கு வியூகம் வகுத்தோம்'

மாவட்ட செயலர்கள் கூட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: எதிர் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து, பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தேர்தலை எதிர்கொண்டு, மகத்தான வெற்றி பெற, அ.தி.மு.க.,வின் வியூகம் அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளின்படி, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கூட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை. உட்கட்சி தேர்தல், பொதுக்குழு கூட்டம் உரிய நேரத்தில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறுகையில், ''சசிகலா குறித்து யாரும் பேசவில்லை. அன்வர்ராஜா ஒருமையில் பேசியது குறித்து, பலர் கண்டனம் தெரிவித்தனர். அவர் பேசக் கூடாது என்றனர். அவர் மன்னிப்பு கேட்டார்; அத்துடன் அந்த பிரச்னை முடிந்தது,'' என்றார்.


எம்.எல்.ஏ.,வை கண்டித்து நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலராக ஆறுமுகம் உள்ளார். இவர், லத்துார் மேற்கு ஒன்றிய செயலர் பதவிக்கு நான்கு பேர் பெயரை பரிந்துரைத்தார்; கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை. ஆனால், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.,வான மரகதம் குமரவேல், தனக்கு வேண்டிய, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவரை, முன்னாள் அமைச்சர் உதவியுடன் ஒன்றிய செயலராக்கினார்.
மாவட்ட செயலருக்கே தெரியாமல், ஒன்றிய செயலர் நியமிக்கப்பட்டது கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, லத்துார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சி தலைமை அலுவலகம் வந்தனர். அங்கு மேல் தளத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, கட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


டிசம்பர் 1ல் கூடுகிறது அ.தி.மு.க., செயற்குழுஅ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1ல் நடக்க உள்ளது.மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று முடிந்த நிலையில், அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1 காலை 10:00 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்திற்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.அனைவரும் அழைப்பிதழோடு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என, கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Chennai,இந்தியா
25-நவ-202114:43:30 IST Report Abuse
Gopal .... please don't repeat the same comment
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
25-நவ-202110:27:23 IST Report Abuse
sankar ஆஹா, என்ன ஒற்றுமை பாருங்கள். இப்படியே போனால் அகில இந்திய திவால் முன்னேற்றக் கழகம் தான்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
25-நவ-202100:24:40 IST Report Abuse
PRAKASH.P Admk chapter closed already in TN
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X