பொது செய்தி

தமிழ்நாடு

கொசு ஒழிப்பில் 1010 களப்பணியாளர்கள்: கலெக்டர் மதுசூதன் ரெட்டி தகவல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிவகங்கை--மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,010 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.வடகிழக்கு பருவ மழையால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவமனையில் 171 படுக்கைகளுடன் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை வார்டு

சிவகங்கை--மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,010 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழையால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவமனையில் 171 படுக்கைகளுடன் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தியுள்ளனர்.

அதை பார்வையிட்ட கலெக்டர் கூறியதாவது: சிவகங்கை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு உட்பட காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் 171 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் சிறப்பு பிரிவு 50 படுக்கைகளுடன் இயங்குகிறது. கொசு ஒழிப்பு பணியில் மாவட்ட அளவில் கிராமம், நகர்புறங்களில் ஆயிரத்து 10 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.டீன் ரேவதிபாலன், பொது மருத்துவ துறை தலைவர் பீர்முகம்மது, சுந்தரம், குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் குணா, நிலைய மருத்துவ அலுவலர் முகமதுரபி, உதவி அலுவலர்கள் மிதுன்குமார், செந்தில்குமார், குழந்தைகள் டாக்டர் பிரவீணா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X