செய்தி செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகள் ஆசிரியர்கள் அழைத்ததால் வந்தார்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வடவள்ளி: சோமையம்பாளையத்தில், பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளை, வீட்டிற்கு சென்று பள்ளிக்கு அழைத்து வந்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.சோமையம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை, 34 மாணவர்கள் படித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக, கடந்த 18 மாதங்களாக, பள்ளியில் நேரடி வகுப்புகள்

வடவள்ளி: சோமையம்பாளையத்தில், பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளை, வீட்டிற்கு சென்று பள்ளிக்கு அழைத்து வந்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.சோமையம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை, 34 மாணவர்கள் படித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக, கடந்த 18 மாதங்களாக, பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. கடந்த, 1ம் தேதி முதல், அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்பு துவங்கப்பட்டது.இந்நிலையில், சோமையம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், 2 மாணவர்கள் பள்ளி திறந்த பின்னும், பள்ளிக்கு வராமலே இருந்துள்ளனர். அப்பள்ளி தலைமையாசிரியர் சித்ரா தேவி மற்றும் ஆசிரியர் கருப்புசாமி ஆகியோர், அம்மாணவர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரித்துள்ளனர்.அப்போது, அக்குழந்தைகளின் பெற்றோர், செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். செங்கல் சூளைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற வருகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வராமல், வீட்டிலேயே இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதனையடுத்து, அக்குழந்தைகள் நேற்று முதல் மீண்டும் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு, இலவச புத்தகங்கள், சீருடைகள், பேக் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X