பொது செய்தி

தமிழ்நாடு

ஏழரை மீட்டர் மின் கம்பத்திற்கு குட்பை: மின்வாரியம் நடவடிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்புவனம்--தமிழகம் முழுவதும் இனி மின்வாரியம் சார்பில் 8 மற்றும் 9 மீட்டர் உயரமுள்ள மின் கம்பங்களே பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.தமிழக மின்வாரிய பயன்பாட்டிற்காக சமயநல்லுார், மானாமதுரை உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மின் கம்பங்கள் தயாரிப்பு தொழிற் சாலைகள் உள்ளன. (நாள் ஒன்றுக்கு இங்கு 100 முதல் 150 மின்கம்பங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. சிமென்ட், ஜல்லி,

திருப்புவனம்--தமிழகம் முழுவதும் இனி மின்வாரியம் சார்பில் 8 மற்றும் 9 மீட்டர் உயரமுள்ள மின் கம்பங்களே பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழக மின்வாரிய பயன்பாட்டிற்காக சமயநல்லுார், மானாமதுரை உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மின் கம்பங்கள் தயாரிப்பு தொழிற் சாலைகள் உள்ளன. (நாள் ஒன்றுக்கு இங்கு 100 முதல் 150 மின்கம்பங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. சிமென்ட், ஜல்லி, மணல், தண்ணீர் உள்ளிட்டவைகளை மின்வாரியமே வழங்கும், கூலி தொழிலாளர்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு மின்கம்பங்கள் தயாரிக்கப்படும்) இங்கு இதுவரை ஏழரை மீட்டர் மற்றும் எட்டு மீட்டர் உயரமுள்ள மின் கம்பங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.சுனாமி, புயல், தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மின்கம்பங்கள் அடிக்கடி சேதமடைவதை தடுக்க இனி எட்டு மற்றும் ஒன்பது மீட்டர் உயரமும் எட்டு செ.மீ., அகலமும் கொண்ட மின் கம்பங்கள் மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதே போல கூம்பு வடிவ மின்கம்பங்கள் இன்றி கீழிருந்து மேற்புறம் வரை எட்டு செ.மீ., அகலம் கொண்ட மின்கம்பங்கள் மட்டுமே தயாரிக்க உள்ளனர்.இதுவரை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய ஏழரை மீட்டர் உயரம் கொண்ட அச்சுகளை மாற்றி புதிதாக 8 மற்றும் 9 மீட்டர் உயரமும் 8 செ.மீ., அகலமும் கொண்ட மின்கம்பங்கள் மட்டுமே இனி தயாரிக்கப்படும், அதனையே பயன்படுத்தவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X