பெண்ணுக்கு வெட்டு நடுரோட்டில் பயங்கரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வடவள்ளி: வடவள்ளி, நஞ்சப்ப வீதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 46. இவரது கணவர் கருப்பசாமி 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகளும், மகனும் உள்ளனர். புவனேஸ்வரி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார்.அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த முருகனுடன், புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. முருகனுக்கு, புவனேஸ்வரி சமையல் செய்து தருவது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார்.கடந்த ஒரு

வடவள்ளி: வடவள்ளி, நஞ்சப்ப வீதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 46. இவரது கணவர் கருப்பசாமி 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு மகளும், மகனும் உள்ளனர். புவனேஸ்வரி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார்.அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த முருகனுடன், புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. முருகனுக்கு, புவனேஸ்வரி சமையல் செய்து தருவது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார்.கடந்த ஒரு வாரமாக, புவனேஸ்வரி, முருகனுக்கு சமையல் செய்து தருவதில்லை. இந்நிலையில், வழக்கம்போல புவனேஸ்வரி வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, புவனேஸ்வரியை முருகன் வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளு வண்டியில் இருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து, புவனேஸ்வரியின் கை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார்.புவனேஸ்வரி கூச்சலிட்டதால், முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அருகிலிருந்தவர்கள் புவனேஸ்வரியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X