சிட்டி கிரைம்| Dinamalar

சிட்டி கிரைம்

Added : நவ 24, 2021
Share
கார் கண்ணாடி உடைப்புகோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார், 37, ஜி.பி., சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் காரில் வந்த அவருக்கு அறிமுகமான மேஜிக் வசந்த், மோதுவது போல் வந்தார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேஜிக் வசந்த் தன்னை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக அருண்குமார் தெரிவித்த புகார்படி, காட்டூர் போலீசார்

கார் கண்ணாடி உடைப்புகோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார், 37, ஜி.பி., சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் காரில் வந்த அவருக்கு அறிமுகமான மேஜிக் வசந்த், மோதுவது போல் வந்தார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேஜிக் வசந்த் தன்னை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக அருண்குமார் தெரிவித்த புகார்படி, காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.காசோலை திருட்டுகோவை ஒப்பணக்கார வீதி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்த காசோலை சேகரிக்கும் பெட்டி, மர்ம நபர்களால் நேற்று முன்தினம் உடைக்கப்பட்டிருந்தது. அதில் போடப்பட்டிருந்த 14 காசோலைகள் திருடப்பட்டிருந்தன. வங்கி மேலாளர் பிரபு கொடுத்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவி மாயம்குனியமுத்துாரை சேர்ந்த 19 வயது மாணவி, கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X