பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை பரப்பை பெருக்க 1.77லட்சம் மரக்கன்றுகள்: வேளாண் காடுகள் திட்டத்தில் வழங்கல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
விருதுநகர்--"மாவட்டத்தில் பசுமை பரப்பை பெருக்க வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1.77லட்சம் மரக்கன்றுகள் வழங்க உள்ளதாக," கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விருதுநகர்--"மாவட்டத்தில் பசுமை பரப்பை பெருக்க வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1.77லட்சம் மரக்கன்றுகள் வழங்க உள்ளதாக," கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு வழங்க 1,77,800 மரக்கன்றுகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, கருமுருது, நாவல், பெருநெல்லி, செம்மரம், வேங்கை, சந்தனம் உள்ளிட்ட 77,800 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.கன்றுகளை பராமரிக்க ஊக்க தொகையும் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வைப்பு தொகை கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரித்து மாவட்டத்தின் பசுமை பரப்பும் பெருகும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X