தமிழ்நாடு

திட்டமிட்டது எட்டு... மூன்றுக்கில்லை துட்டு! மறுபடியும் பட்டியல் தயாரிக்குது மாநகராட்சி ​

Added : நவ 24, 2021
Share
Advertisement
--நமது நிருபர்-எட்டு திட்டச்சாலைகள் போடுவதற்கு, கோவை மாநகராட்சி திட்டமிட்டு, நிதியில்லை என்று கடைசியில் முக்கியமான மூன்று ரோடுகளை கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.பெரிய கட்டடங்களுக்கு திட்ட அனுமதி தருவதற்காக, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தால் வசூலிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம் (Infrastructure & Amenities Charges) பல நுாறு கோடி ரூபாய், நகர ஊரமைப்புத்துறையிடம்



--நமது நிருபர்-எட்டு திட்டச்சாலைகள் போடுவதற்கு, கோவை மாநகராட்சி திட்டமிட்டு, நிதியில்லை என்று கடைசியில் முக்கியமான மூன்று ரோடுகளை கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.பெரிய கட்டடங்களுக்கு திட்ட அனுமதி தருவதற்காக, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தால் வசூலிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம் (Infrastructure & Amenities Charges) பல நுாறு கோடி ரூபாய், நகர ஊரமைப்புத்துறையிடம் உள்ளது. இந்த தொகையை, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே பயன்படுத்த வேண்டும்.மாநகராட்சி தட்டிக்கழிப்புஇந்தத் தொகையைப் பெற்று, கோவை மாஸ்டர் பிளானில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட உத்தேச திட்டச்சாலைகளில், ஐம்பது ரோடுகளையாவது மேம்படுத்தியிருக்க முடியும். ஆனால் நிதியில்லை என்று, மாநகராட்சி எந்த ரோட்டையுமே மேம்படுத்தாமல் பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளது.கோவையில் வசூலிக்கப்படும் தொகை, வேறு பகுதிகளுக்கு செலவிடப்படுகிறது. 2010ல் செம்மொழி மாநாட்டையொட்டி, முதல் முறையாக இதிலிருந்து நிதியைப் பெற்று 13 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இணைப்புச் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. அதற்குப் பின் பத்தாண்டுகளாக எந்தவொரு திட்டச்சாலையும் மேம்படுத்தப்படவில்லை.ஐந்து இணைப்புச் சாலைகள் மேம்பாடுமீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தபின், தற்போது நகர ஊரமைப்புத்துறையிடம் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்திலிருந்து ரூ.144 கோடியே 30 லட்சம் நிதியைப் பெற்று, ஐந்து இணைப்புச்சாலைகளை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக தீர்மானம் நிறைவேற்றி, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மண்டலத்துக்கு ஒரு ரோடு வீதமாக, திட்டச்சாலையை தேர்வு செய்து மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், முதலில் எட்டு ரோட்டை திட்டமிட்டு, மூன்றை மாநகராட்சி நீக்கியுள்ள உண்மை தெரியவந்துள்ளது.அதில், 5.14 கி.மீ., நீளமுள்ள நஞ்சுண்டாபுரம் ரோடு-வாலாங்குளம் பை-பாஸ் ரோடு இணைப்பு 100 அடி திட்டச்சாலை, 4.5 கி.மீ., நீளமுள்ள உக்கடம் ஆத்துப்பாலம்-நஞ்சுண்டாபுரம் ரோடு இணைப்புச்சாலை, 600 மீட்டர் நீளமுள்ள திருச்சிரோடு-கோ ஆபரேட்டிவ் காலனி-ராஜிவ் காந்தி நகர் ரோடு இணைப்புச்சாலை ஆகிய திட்டச்சாலைகளும் இடம் பெற்றிருந்தன.


நிதியில்லாததால் நீக்கம்!

ஆனால் இந்த ரோடுகளில் நிலம் கையகப்படுத்த, அதிக நிதி தேவையென்று மாநகராட்சியே மதிப்பிட்டு, அவற்றை நீக்கியுள்ளது. இவற்றில், நஞ்சுண்டாபுரம் ரோட்டிலிருந்து சிவராம் நகர் வழியாக வாலாங்குளம் ரோட்டை இணைக்கும் 100 அடி திட்டச்சாலை, அப்பகுதி மக்களின் 30 ஆண்டு கனவாகும். இந்த 100 அடி ரோட்டை 80 அடியாகக் குறைத்து அமைத்தாலாவது, திருச்சி ரோட்டில் நெரிசல் பெருமளவில் குறையும்.அதேபோல, சவுரிபாளையத்தில் மாரியம்மன் கோவில்-மகாலட்சுமி கோவில் வரையிலான 390 மீட்டர் ரோடு மிகவும் குறுகலாகவுள்ளது. 3 கோடி ரூபாய் இருந்தால், நிலத்தைக் கையகப்படுத்தி, ரோட்டை அகலப்படுத்தலாம். அதுவும் இதில் இடம்பெறவில்லை.நெரிசலை இப்பவே குறைக்கணும்நல்லாம்பாளையம்-கணபதி ரோடும் மிகவும் அவசியமாக மேம்படுத்தப்பட வேண்டிய ரோடாகும். மேட்டுப்பாளையம் ரோட்டையும், தடாகம் ரோட்டையும் ஜீவா நகர், இந்திரா நகர் வழியே இணைக்கும் ரோட்டை மேம்படுத்தினால், என்.எஸ்.ஆர்., ரோட்டில் போக்குவரத்து நெரிசல், பாதியாகக் குறைந்து விடும். இப்படி நகருக்குள் பல ரோடுகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.இந்த ரோடுகளை மேம்படுத்த இப்போதே நிதியில்லை என்றால், எதிர்காலத்தில் எதுவுமே செய்ய முடியாது. உண்மையில் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டுமெனில், இத்தகைய ரோடுகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.இப்போது கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக, மறுபடியும் ஒரு பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் தயாரிப்பதாகத் தெரியவந்துள்ளது.எப்படியாவது இந்த ரோடுகளை அமைப்பது மாநகராட்சியின் கடமை; அதை விடுத்து பணமில்லை என்பது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமில்லை, தொலைநோக்குமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X