செய்தி செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் உள்ளூர் புகார் குழு விபரம் திரட்டும் போலீசார்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: பேரூர் சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்களை, போலீசார் திரட்டி வருகின்றனர்.கோவையில், பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தால், அனைத்து பள்ளிகளிலும், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், மகளிர் போலீசார், மாணவிகள் பிரதிநிதிகள் அடங்கிய உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என,

தொண்டாமுத்தூர்: பேரூர் சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்களை, போலீசார் திரட்டி வருகின்றனர்.கோவையில், பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தால், அனைத்து பள்ளிகளிலும், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், மகளிர் போலீசார், மாணவிகள் பிரதிநிதிகள் அடங்கிய உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பள்ளிகளில், புகார் பெட்டி வைத்து, உள்ளூர் புகார் குழுவை உருவாக்கியுள்ளனர்.இந்நிலையில், பேரூர் சரகத்திற்கு உட்பட்ட வடவள்ளி, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யாநகர், பேரூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா, உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அக்குழுவில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்தும், போலீசார் விபரங்களை திரட்டி வருகின்றனர். அதோடு, பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X