பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு கூட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: சிறார்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட, போக்சோ சட்டத்தின் நோக்கம், சட்டப்பிரிவுகள் குறித்து, ஆசிரியர்கள், பெற்றோருக்கு, ஆண்டுதோறும், விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டுமென, மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தனியார் பள்ளி மாணவிக்கு, ஆசிரியர் அளித்த பாலியல் தொந்தரவால், சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற

கோவை: சிறார்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட, போக்சோ சட்டத்தின் நோக்கம், சட்டப்பிரிவுகள் குறித்து, ஆசிரியர்கள், பெற்றோருக்கு, ஆண்டுதோறும், விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டுமென, மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தனியார் பள்ளி மாணவிக்கு, ஆசிரியர் அளித்த பாலியல் தொந்தரவால், சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்க, பள்ளிகளில் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும், புகார் பெட்டி வைத்து, அதில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை, கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மாவட்டத்திற்கு ஒரு உளவியல் மருத்துவர் நியமித்து, மாணவர்கள் மத்தியில் உள்ள, உளவியல் ரீதியான பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும். போக்சோ சட்டத்தின் நோக்கம், சட்ட பிரிவுகள், தண்டனை குறித்து, ஆசிரியர்கள், பெற்றோருக்கு, மாவட்ட சட்ட உதவி ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, ஆண்டுதோறும் கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்ற வேண்டுமென, மக்கள் சிவில் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X