செய்தி செய்தி

தமிழ்நாடு

நிலுவை ஊக்க ஊதியம் செவிலியர் எதிர்பார்ப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை, அரசு அறிவித்தபடி உடனடியாக விடுவிக்க, கிராம சுகாதார செவிலியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவையில் கிராம சுகாதாரம், பகுதி சுகாதாரம், சமுதாய சுகாதாரம் என்ற பிரிவுகளில், 350க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கிராமப்புறங்களிலுள்ள தாய்-சேய் நலப்பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அறிவித்த ஊக்க

கோவை: கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை, அரசு அறிவித்தபடி உடனடியாக விடுவிக்க, கிராம சுகாதார செவிலியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவையில் கிராம சுகாதாரம், பகுதி சுகாதாரம், சமுதாய சுகாதாரம் என்ற பிரிவுகளில், 350க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கிராமப்புறங்களிலுள்ள தாய்-சேய் நலப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், அறிவித்த ஊக்க ஊதியம் வழங்க இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, கோவை மாவட்ட கிராம, பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் செயலாளர் லில்லி கூறுகையில்,''வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். பணி நேரம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி என வரையறை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு 2021 ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான, 15,000 ரூபாய் ஊக்க ஊதியத்தை, உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X