பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு

சென்னை:ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.பயிற்சி பெறும் மாணவர்கள், பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை, கோவில் இணையதளமான, www.srirangam.org; ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளமான, www.hrce.tn.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பித்து பயனடையலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X